சொத்து தகராறில் மோதல்; 8 பேர் மீது வழக்கு
நிலக்கோட்டை அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையை சேர்ந்தவர் ரவி (வயது 59). விவசாயி. இவரது தம்பி ஜெயராமன் (51). இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, இருதரப்பினர் மோதலாக உருவானது. அப்போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ரவி கொடுத்த புகாரின்பேரில் ஜெயராமன், வீரம்மாள், அனுசியா, ராதிகா ஆகிய 4 பேர் மீதும், ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் ரவி, நாட்ராயன், நாகராஜன், ராசாத்தி ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story