தொல்லியல் கருத்தரங்கம்


தொல்லியல் கருத்தரங்கம்
x

தொல்லியல் கருத்தரங்கம் நடந்தது.

ராமநாதபுரம்


தொல்லியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ராமநாத புரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியும் இணைந்து தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தின. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் தேவமனோகரன் மார்ட்டின் தலைமை தாங்கி னார். கல்லூரி முதல்வர் ஆனந்த் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், தொல்லியல் இடங்கள், இயற்கை தாவரங்கள், நாணயங்கள் உள்ளிட்ட தொல்லியல் தடயங்கள் பற்றி சிறப்புரையாற்றினார். ராமநாத புரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ், கீழடி, மயிலாடும்பாறை, கொற்கை, சிவகளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய தொல்லியல் அகழாய்வுகள் பற்றியும், கல்லூரியின் முதலாமாண்டு மாணவி சிவரஞ்சனி நடுகற்கள், மலைக்குகைகள், முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகளில் காணப்படும் சங்ககால தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பற்றியும் படங்களுடன் விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உதவிபேராசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story