சாத்தான்குளத்தில்காங்கிரஸ் முப்பெரும் விழா ஏற்பாடு:ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு


சாத்தான்குளத்தில்காங்கிரஸ் முப்பெரும் விழா ஏற்பாடு:ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில்காங்கிரஸ் முப்பெரும் விழா ஏற்பாடுகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா, 77-வது சுதந்திர தினவிழா மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா வருகிற செப்.3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழா நடைபெற உள்ள பள்ளி மைதானத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அங்கு விழா குறித்து கட்சி நிர்வாகிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாநில பொதுககுழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் எடிசன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story