சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை


சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு கம்பத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது.

தேனி

சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாதயாத்திரை தொடக்க விழா, கம்பத்தில் இன்று நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன் தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் போஸ் (கம்பம்), ஜெயப்பிரகாஷ் (கூடலூர்), வட்டார தலைவர் வக்கீல் சத்தியமூர்த்தி, கம்பம் நகராட்சி கவுன்சிலர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் கவிஞர் பாரதன், சுதந்திர தினம் குறித்து பேசினார்.

பின்னர் கம்பத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து காந்தி சிலையில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரை கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி வழியாக உத்தமபாளையத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டனர்.


Next Story