காங்கிரஸ் கட்சியை முடக்க சதி - ப.சிதம்பரம்


காங்கிரஸ் கட்சியை முடக்க சதி - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 29 March 2024 8:53 AM GMT (Updated: 29 March 2024 11:04 AM GMT)

காங்கிரஸ் அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்று அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

சென்னை,

காங்கிரஸ் கட்சி கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடப்பதாக முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது என்பதே இதுவரையிலான நடைமுறை. 8 ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன்?. 139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடக்கிறது. என கூறியுள்ளார்


Next Story