குப்பம் ஊராட்சியில் ரூ.2½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணி
குப்பம் ஊராட்சியில் ரூ.2½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி போளூர் ஒன்றியம் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்குப்பம் கிராமத்தில் இருந்து இரும்புலி கிராமம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
தொடர்ந்து சாலையை சீரமைக்கக்கோரி கலசபாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.விடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதனை ஏற்று ரூ.2 கோடியே 60 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story