அடிபம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைத்த விவகாரம் : ஒப்பந்ததாரர் கைது


அடிபம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைத்த விவகாரம் :  ஒப்பந்ததாரர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2022 8:15 AM GMT (Updated: 11 Aug 2022 8:23 AM GMT)

குடிநீர் அடிபம்புடன் கழிவு நீர் கால்வாய் அமைத்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு கைது செய்யப்ட்டுள்ளார்

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தில் அடிபம்போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை அனுப்பி அடிபம்பை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இந்த விவகாரம் வேலூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக பணியை செய்த ஒப்பந்ததாரர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் குடிநீர் அடிபம்புடன் கழிவு நீர் கால்வாய் அமைத்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு கைது செய்யப்ட்டுள்ளார்.பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்


Next Story