மாடு விடும் திருவிழா
கே.வி.குப்பம் அருகே மாடு விடும் திருவிழா நடந்தது. அதில் மாடுகள் முட்டி 12 பேர் காயம் அடைந்தனர். 3 மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் அருகே மாடு விடும் திருவிழா நடந்தது. அதில் மாடுகள் முட்டி 12 பேர் காயம் அடைந்தனர். 3 மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
6 மாடுகள் திருப்பி அனுப்பப்பட்டன
கே.வி.குப்பம் தாலுகா மேல்மாயில் கிராமத்தை அடுத்த மேல்மாங்குப்பத்தில் மாடு விடும் திருவிழா நடந்தது. அதில் பங்ேகற்க சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 260 மாடுகள் கொண்டு வரப்பட்டன. அதில் வயது குறைவு காரணமாக 6 மாடுகள் திருப்பி அனுப்பப்பட்டன. 254 மாடுகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.
வாடிவாசலில் இருந்து மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுகள் ஓடும் பாதையில் இரு பக்கமும் சவுக்கு மரக் கட்டைகளால் தடுப்பு கட்டப்பட்டு இருந்தது. அதன் மீது அமர்ந்தும், மாடு ஓடும் பாதையின் குறுக்கே நின்றும் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.
பரிசுகள்
குறித்த நேரத்தில் எல்லையைக் கடந்து சென்ற மாடுகளுக்கு அறிவிக்கப்பட்டபடி முதல் பரிசாக ரூ.70 ஆயிரத்து 777, 2-வது பரிசாக ரூ.60 ஆயிரத்து 666, 3-வது பரிசாக ரூ.50 ஆயிரத்து 555 என மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டன.
முதலுதவி முகாம், தீயணைப்பு வாகனங்கள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாடுகள் முட்டி 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதேபோல் 3 மாடுகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. காயங்களுக்கு முதலுதவி மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாடு விடும் திருவிழாவை தாசில்தார் து.சரண்யா, மண்டல துணைத் தாசில்தார் கி.பலராமன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா, கவுன்சிலர் அடிமைப் பெண் வேங்கையன் கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசந்திரன், தவமணி, பழனி உள்ளிட்டோர் கண்காணித்தனர்