டி 20 அணிக்கு முதுகுளத்தூர் வீரர் தேர்வு


டி 20 அணிக்கு முதுகுளத்தூர் வீரர் தேர்வு
x

தமிழ்நாடு நெட் கிரிக்கெட் டி 20 அணிக்கு முதுகுளத்தூர் வீரர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

சேலத்தில் நெட் பந்து கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் தமிழ்நாடு நெட் கிரிக்கெட் டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த தேவ சித்தம் என்பவர் தேர்வாகி உள்ளார். மேலும் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் ஜூன் மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ள லீக் போட்டியில் கலந்துகொள்கிறார். தமிழ்நாடு நெட் கிரிக்கெட் அணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே தேர்வாகி உள்ளார். இவர் லங்கடி அணிக்கு முன்னாள் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தேவ சித்தம் தமிழ்நாடு கிரிக்கெட் போர்டு நடத்தும் லீக் போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட அணிக்காக விளையாடி வருகிறார்.


Next Story