தினத்தந்தி செய்தி எதிரொலி:ஆதரவின்றி தவித்த மூதாட்டி மீட்பு
மூதாட்டி மீட்பு
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் கைக்கோளபாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 65). இவர் ஆதரவின்றி தவித்து வந்தார். மேலும் அவர் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையில் தங்கி இருந்தார். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் பிரசுரமாகி இருந்தது.
இதை கண்டதும் ஈரோடு சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலரான விமல் கருப்பணன் மற்றும் நிர்வாகிகள், ஆதரவின்றி தவித்த ராஜாமணியை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள 'நமது இல்லம்' என்ற முதியோர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, திங்களூர் போலீசார் அனுமதியுடன், ஈரோடு தொழிலதிபர் அக்னி ஸ்டில் தங்கவேல் ஏற்பாடு செய்து கொடுத்த கார் மூலம், கைக்கோளபாளையம் சமூக ஆர்வலர் விஜயன் என்பவர் மூலம் ராஜாமணி புதுக்கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டு 'நமது இல்லம்' முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.