தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

மது விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சந்து கடை மூலம் மதுபானம் விற்பனை அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் அதிக அளவில் நடக்க வாய்ப்பு உள்ளதுடன், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதினால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கைகளத்தூர், பெரம்பலூர்.


Next Story