தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், நத்தம்பண்ணை ஊராட்சி செல்லுகுடி கிராமத்தில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த வழியாக மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.


நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்திற்கு பட்டுக்கோட்டை கோட்டைக்கு தினமும் 29-வது எண் கொண்ட அரசு டவுன் பஸ் தினமும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 2 ஆண்டுகளாக பஸ் இயங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

வீரமுத்து அருணாசலம், கீரமங்கலம், புதுக்கோட்டை


Next Story