தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான செய்திகள் வருமாறு:-
சாலை வசதி வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் கடக்கம் ஊராட்சி கடக்கம்-புலவனூர் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு முரடாக உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் குண்டும், குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- கோபு, பணயக்குடி.
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
திருவாரூர் மாவட்டம,் குடவாசல் தாலுகா, 11 ஆலத்தூர் ஊராட்சியின் கீழ் ஆனைப்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலைநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியின் மூலம் அந்த பகுதிமற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டியின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -
பொதுமக்கள், 11 ஆலத்தூர் ஊராட்சி.