தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

நடவடிக்கை எடுக்கப்பட்டது

தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட எஸ். பி. காலனியில் உள்ள தெருக்களில் மின் விளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவதாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி-படம் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து மின்விளக்குகள் மீண்டும் எரிகிறது. இதற்காக செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தடுக்கப்படுமா?

இரு சக்கர வாகனங்களில் லேசர் லைட் மற்றும் எக்ஸ்டிரா எல்.இ.டி. போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இதனால் எதிரே வருபவர்கள் கண்கள் கூசி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் விபத்தை தடுக்கும் வகையில் வழக்கமான பல்புகளை தவிர அதிக ஒளிவீசும் பல்புகளை பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சகாயம், தென்தாமரைகுளம்.

பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 50-வது வார்டு வைராவிளை பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக ரூ .7லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி உள்ளனர். ஆனால் இதுவரை அந்த நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த பகுதி மக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-அ.தியாகு, வைராவிளை.

சுகாதார சீர்கேடு

தோவாளை தாலுகா, ஆரல்வாய்மொழி பகுதிக்குட்பட்ட அழகியநகர், பொய்கை நகர் பகுதிகளில் நீண்ட நாட்களாக கழிவுநீர் ஓடைகள் தூர்வாரப்படாததால், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழகியநகர், பொய்கைநகர் பகுதி ஓடைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

மண் குவியலை அகற்ற வேண்டும்

பூதப்பாண்டி அரசியார் கால்வாய்க்கு செல்லும் பாதையில் மண் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதி வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.எனவே மண்ணை அகற்றி, அந்த வழியாக பொதுமக்கள் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன், பூதப்பாண்டி.

நடவடிக்கை அவசியம்

குருந்தங்கோடு ஊராட்சியில் உள்ள ஆலன்விளை பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் சாலை பழுதடையும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் சீராக செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபி, ஆலன்விளை.


Next Story