சேதமடைந்த நூலக கட்டிடம்


சேதமடைந்த நூலக கட்டிடம்
x

கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகத்தில் சேதமடைந்த நூலக கட்டிடத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகத்தில் சேதமடைந்த நூலக கட்டிடத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த நூலகம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, விழல்கோட்டகம் கிராமத்தில், கிராமப்புற மக்கள் பயன்பாட்டுக்காக அரசு நூலகம் கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்த நூலகத்துக்கு அப்பகுதி பள்ளி மாணவர்கள் மற்றும் மக்கள் சென்று பல்வேறு வகையான நூல்கள் மற்றும் தினசரி நாளிதழ்களை தினமும் படித்து வருகின்றனர். இந்த நூலக கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக, நூலக கட்டிடத்தின் தரைதளம் சுமார் ஒரு அடி ஆழத்தில் உள்வாங்கி உள்ளது. மேலும், கட்டிடத்தில் உள்பகுதியில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு மழை தண்ணீர் உள்ளே செல்கிறது.

சீரமைக்க கோரிக்கை

இருப்பினும், தினமும் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சம் அடைந்த நிலையிலேயே நூலகம் சென்று படித்து வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story