திருச்செந்தூர் கோவிலில் நடிகர் பாக்யராஜ் சாமி தரிசனம்
திருச்செந்தூர் கோவிலில் நடிகர் பாக்யராஜ் சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று மதியம் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் வந்தார்.
அவர்கள் கோவிலுக்கு சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த நடிகர் பாக்யராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ''புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, எனது நட்சத்திர பிறந்தநாள். அதனால் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தேன். எம்.ஜி.ஆரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தமிழத்தில் அவர் நினைத்தது போல் எல்லாம் நடந்து மீண்டும் அவர் பெயர் சொல்ல வேண்டும். மக்கள் அனைவரும் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என வேண்டினேன். வரும் ஆண்டில் புதிய படம் இயக்க உள்ளேன்" என்றார்.
Related Tags :
Next Story