மாமனார் கொடுமைப்படுத்தியதால்2 பெண் குழந்தைகளுடன் மருமகள் மாயம்


மாமனார் கொடுமைப்படுத்தியதால்2 பெண் குழந்தைகளுடன் மருமகள் மாயம்
x

மங்கலம்பேட்டை அருகே வீட்டில் குடிநீர், மின் இணைப்பை துண்டித்து மாமனார் கொடுமைப்படுத்தியதால் 2 பெண் குழந்தைகளுடன் மருமகள் மாயமானார்.

கடலூர்

மங்கலம்பேட்டை,

மங்கலம்பேட்டை அருகே உள்ள கோ.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் மனைவி சீதாலட்சுமி(வயது 30). டிப்ளமோ நர்சிங் படித்துள்ள இவருக்கும், வெங்கட்ராமனுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கட்ராமன், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சீதாலட்சுமியின் மாமனார் கோவிந்தசாமி அடிக்கடி சீதாலட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதன் உச்சக்கட்டமாக கடந்த 28-ந் தேதி அன்று சீத்தாலட்சுமியின் வீட்டிற்கு சென்ற மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை கோவிந்தசாமி துண்டித்துள்ளார்.

குழந்தைகளுடன் மருமகள் மாயம்

மாமனாரின் கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாத சீதாலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் 3 பேரும் எங்கே சென்றார்கள், என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இது பற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த சீதாலட்சுமியின் தந்தையான காட்டுமன்னார்கோவில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமதாஸ் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான சீதாலட்சுமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story