ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட மாநாடு


ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட மாநாடு
x

நாகையில் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது

நாகப்பட்டினம்

நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் வேலையின்மை என்பது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வேலை வாய்ப்புக் கேட்டு விண்ணப்பித்திருந்த 22 கோடி பேரில் 7 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அளவில் 0.33 சதவிதம் ஆகும். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் வேலை வாய்ப்புக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கும், இளைஞர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் ரெஜீஷ்குமார், நாகை மாவட்டத் தலைவர் நன்மாறன், மாவட்டச் செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.








Next Story