Normal
ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் அமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மேலப்பாளையம் தலைவர் ஷம்சுல் ஹக் அன்வாரி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மீரான் முகைதீன் அன்வாரி முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட தலைவர் முகம்மது ராசிக் பைஜி தொடக்க உரையாற்றினார். கியான்வாபி ஜூம்மா பள்ளிவாசலில் வழிபாட்டு ஸ்தலங்கள் சட்டபிரிவுக்கு எதிராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீது உஸ்மானி, நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் பீர்மஸ்தான், பாப்புலர் பிரண்ட் நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுல்தான் உரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story