இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

கிருஷ்ணகிரியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் ராகுல் காந்தியை எம்.பி.யை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விக்னேஷ்பாபு, தொகுதி தலைவர் சதாம் உசேன், நகர தலைவர் நிதீஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் கவியரசன், சென்னப்பன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சேகர் கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு பரப்பி தண்டனை பெற்று தர காரணமாக இருந்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சேவாதளத் தலைவர் தேவராஜ் நன்றி கூறினார்.


Next Story