மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x

மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சி சார்பில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சோளிங்கர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தலைவர் பீட்டர் வெஸ்லி, பனப்பாக்கம் பேரூர் தலைவர் தட்சணாமூர்த்தி, செயலாளர் பிரீத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாவேந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.முன்னதாக பஸ் நிலையத்திலிருந்து மதுக்கடை அமையவுள்ள இடம் நோக்கி மதுக்கடையை திறக்கதே, மக்களை கெடுக்கதே என்று கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்றனர். இதில் மண்டல பொருளாளர் தவுபிக் பிக்ரத், மாவட்ட தலைவர் கோகுலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அசோக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story