விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

விருதுநகர்,

பெங்களூருவில் ஐக்கிய விவசாயிகள் முன்னணித்தலைவர் ராகேஸ் டிகாயத் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவர் மீது கருப்பு மையை வீசியதுடன் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் காளிதாஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் விஜய முருகன், பொருளாளர் மனோஜ் குமார், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மணிக்குமார், ஆறுமுகம், சுப்பாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.Next Story