கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

திருவாரூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கலையரசி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பரமேஸ்வரி, முன்னாள் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். அப்போது காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஆன்லைன் பணிகளை கிராம சுகாதார செவிலியர்களிடம் திணிக்க கூடாது. கிராம சுகாதார செவிலியர்களை டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆக மாற்றும் நிலையை தவிர்க்க வேண்டும். தாய்சேய் நலப்பணிகளை மட்டும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story