கவர்னரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


கவர்னரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலைக்கு வருகை தந்த கவர்னரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருவண்ணாமலைக்கு வந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தளபதி பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கவர்னர் வரும் போது கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தங்கராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் நியூட்டன், வளர்மதி, ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சீனிகார்த்திகேயன், தளபதி பேரவை தலைவர் அருள்காந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கவர்னர் கார் ரமணாஸ்ரமம் அருகில் வந்ததும் போலீசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியின் அருகில் சாலையை மறித்து தடுப்புகளை அமைத்தனர். மேலும் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னரை கண்டித்து கருப்பு கொடியை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனால் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story