விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் புதிய அலுவலகங்கள் உருவாக்கம்


விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில்    புதிய அலுவலகங்கள் உருவாக்கம்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் புதிய அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்


தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக நலன் கருதி சீரமைக்கப்பட்டும், புதிய அலுவலகங்கள் உருவாக்கப்பட்டும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் இருந்த நிலையில் அந்த கல்வி மாவட்டங்களை ஒருங்கிணைத்து விழுப்புரம் மற்றும் திண்டிவனம் என 2 கல்வி மாவட்டங்கள் கடந்த 1.10.2022 முதல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் விழுப்புரம்- திண்டிவனம் கல்வி மாவட்டங்களுக்கு தலா 7 ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டு புதியதாக 2 தொடக்கக்கல்வித்துறை அலுவலர் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கான 2 மாவட்ட கல்வி அலுவலர்களும், தனியார் பள்ளிகளுக்கென தனியாக ஒரு மாவட்ட கல்வி அலுவலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர்களாக கோ.கிருஷ்ணன் (இடைநிலைக்கல்வி), கவுசர் (தொடக்கக்கல்வி), திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர்களாக சிவசுப்பிரமணியன் (இடைநிலைக்கல்வி), மணிமொழி (தொடக்கக்கல்வி) ஆகியோரும், மேலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story