தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில் திருவிழா:கரும்புதொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்


தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில் திருவிழா:கரும்புதொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் திருவிழாவில் கரும்புதொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேனி

தேவதானப்பட்டியில் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு சிலை இல்லை. அடைக்கப்பட்ட குச்சு வீட்டில் கதவிற்கு தான் பூஜை நடைபெறுகிறது. ஆண்டுேதாறும் இந்த கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவிற்காக கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 18-ந்தேதி தொடங்கிய திருவிழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி தினந்தோறும் ராஜ கம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் கோவில் வந்து சேருதல் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி கரும்பு தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிலையில் நேற்று கரும்பு தொட்டில், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story