மேம்பாட்டு பணிகள் தீவிரம்


மேம்பாட்டு பணிகள் தீவிரம்
x

கோத்தகிரி நேரு பூங்காவில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவை மேம்படுத்த, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் கோத்தகிரி பேரூராட்சி ஒதுக்கீடு செய்தது. அதன்படி பூங்காவில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கோத்தகிரி பகுதியில் தொடர் மழை பெய்ததால், பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. ஆனால், தற்போது மழை பெய்யாமல், இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் வெளியூர் சுற்றுலா பயணிகள் நேரு பூங்காவுக்கு வர தொடங்கி உள்ளனர். அரசு விடுமுறையான நேற்று அங்குள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்ததை காண முடிந்தது. உள்ளூர் மக்களும் வந்திருந்தனர்.


Next Story