வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் தர்ணா


வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் தர்ணா
x

வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கம் புதுக்கோட்டை கிளையின் சார்பில் தோட்டக்கலை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். நாகராஜ் முன்னிலை வகித்தார். இணைச்செயலாளர் காளிமுத்து வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன் விளக்கவுரையாற்றினார். மாநிலத்தலைவர் சுமதி துவக்கவுரையாற்றினார். போராட்டத்தில் புதுக்கோட்டை தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியுரியும் உதவியாளரை, அதே அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் தாக்கியுள்ளார். மேலும் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை தோட்டக்கலை துணை இயக்குனரிடம் முறையீடு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சென்னை தோட்டக்கலை இயக்குனர் உரிய விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது உடனே துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர்.


Next Story