மாணவிகள் விடுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சீர்காழியில் மாணவிகள் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழியில் மாணவிகள் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சீர்காழி தென்பாதி இந்திரா நகரில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவி விடுதியை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் திட்டப்பணிகள் இயக்குனருமான அமுதவல்லி நேற்று திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது விடுதியில் எத்தனை மாணவிகள் தங்கி படித்து வருகின்ற விவரங்களை கேட்டு அறிந்தார். மாணவிகளிடம் தினமும் வழங்கப்படும் உணவு குறித்துகேட்டு அறிந்தார். பின்னர் சமையலறை, படுக்கையறை, கழிவறை கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து கழிவறை கட்டிடத்தில் சேதமடைந்த கதவுகள், குடிநீர் குழாய் உள்ளிட்டவற்றை சீரமைக்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
காப்பாளர் கோரிக்கை
விடுதிக்கு புதிதாக மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என விடுதி காப்பாளர் கோரிக்கை விடுத்தார்.இதை தொடா்ந்து அருகில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் மாணவி விடுதினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவிகளிடம் கல்வி தரம் குறித்து கேட்டறிந்தார்.
மாணவிகளுக்கு உணவினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வழங்க அறிவுறுத்தினார். விடுதி வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
தமிழிசை மூவர் மணிமண்டபம்
சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்
அம்பிகாபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்தமிழ் செல்வன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் மண்டல தாசில்தார் ரவிச்சந்திரன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.