தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்


தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
x

தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

மதுரை


மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு தே.மு.தி.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளரும், நடிகருமான ராஜேந்திரன் தலைமையில் உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன், மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகையாக ரூ.1000 வழங்க வேண்டும், தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவும், அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் மற்றும் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.இதில் அண்ணாநகர் பகுதி செயலாளர் முருகன், முனிச்சாலை பகுதி செயலாளர் ராஜ்குமார், மற்றும் மாவட்டஅணி அமைப்பாளர்கள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story