ஏரியில் மூழ்கி பலியான தே.மு.தி.க. பிரமுகரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு


ஏரியில் மூழ்கி பலியான  தே.மு.தி.க. பிரமுகரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்  சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
x

ஏரியில் மூழ்கி பலியான தே.மு.தி.க. பிரமுகரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலம்,

ஏரியில் மூழ்கி பலி

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் கலையரசன் (வயது 25). தே.மு.தி.க. பிரமுகரான இவர் பட்டுக்கடை ஒன்றில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். கலையரசன் கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சென்ற மோட்டார் சைக்கிள் பூலாவாரியில் உள்ள ஏரி கரையோரம் நின்றது. இதனால் சந்தேகத்தின் பேரில் சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஏரியில் இறங்கி தேடினர்.

அப்போது ஏரியில் மூழ்கி பலியான கலையரசன் உடல் மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது உடலை கொண்டலாம்பட்டி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில் கலையரசனின் உறவினர்கள் நேற்று காலை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடம் உள்ள பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலையரசன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலையரசன் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலையரசனின் உடலை பெற்று கொண்டனர். இதற்கிடையில் கலையரசனுடன் ஏரிக்கு சென்ற அதே பகுதியை அவருடைய நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story