சேலத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் பொதுமக்களிடம் கருத்து கேட்பு


சேலத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் பொதுமக்களிடம் கருத்து கேட்பு
x

கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

சேலம்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை தொடர்ந்து, ஏழாவது மாவட்டமாக சேலத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவினரின் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகளின் அடிப்படையில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story