தூக்க மாத்திரைகள், மனநல மருந்துகளை வழங்கக்கூடாது


தூக்க மாத்திரைகள், மனநல மருந்துகளை வழங்கக்கூடாது
x

டாக்டரின் பரிந்துரை இல்லாமல் தூக்க மாத்திரைகள், மனநல மருந்துகளை வழங்கக்கூடாது என்று மருந்தாளுனர்களுக்கு ஆய்வாளர் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரத்தில் மருந்தாளுனர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம், மாவட்ட மருந்தாளுனர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமிற்கு மருந்தாளுனர்கள் சங்க மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னையா, மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டாச்சிபுரம் நிர்வாகி விஜயஆனந்த் வரவேற்றார். இம்முகாமில் ஓய்வு பெற்ற மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ஜெயராஜ், திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா, அரசு மருத்துவர்கள் பாக்கியலட்சுமி, ரவிக்குமார், மதன்ராஜ், விஷ்ணுகுமரன், சுமித்ரா, மருந்தாளுனர்கள் சங்க மாநில செயலாளர் வேங்கடசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கி பேசினர். திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா பேசுகையில், கருக்கலைப்பு மாத்திரைகளை டாக்டர் ஆலோசனை பெறாமல் கடைகளில் விற்கக்கூடாது. இதனால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கினால் உயிரிழப்புகள் கூட நடக்கிறது. எனவே கருக்கலைப்பு செய்வது குறித்து மகப்பேறு நல டாக்டாின் ஆலோசனை பெறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது. அதுபோல் தூக்க மாத்திரைகள், மனநல மருந்துகள் ஆகியவற்றை டாக்டரின் பரிந்துரை இல்லாமல் வழங்கக்கூடாது. மருந்தாளுனர்கள், நோயாளிகள் இடையேயான புரிதல் இருக்க வேண்டும் என்றார். இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மருந்தாளுனர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி அண்ணாமலை நன்றி கூறினார்.


Next Story