கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த டாக்டர்கள்


கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த டாக்டர்கள்
x

டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

பெரம்பலூர்

சமீபத்தில் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கொடுமைப்படுத்திய ராஜஸ்தான் அரசை கண்டித்தும், டாக்டர்களை பாதிக்கும் மசோதாவை உடனடியாக ராஜஸ்தான் மாநில அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். பின்னர் மாலை அந்த சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகத்தை நேரில் சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்தனர்.


Next Story