டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் வரவேற்பு தடகளப் போட்டிகள்


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் வரவேற்பு தடகளப் போட்டிகள்
x

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் வரவேற்பு தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பி.பி.எஸ் 3-ம் ஆண்டு, பி.பி.எட் மற்றும் எம்.பி.எட் 2-ம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்கள் இணைந்து வரவேற்பு தடகள போட்டிகள் நடத்தினர். இப்போட்டியில், பி.பி.எஸ், பி.பி.எட் மற்றும் எம்.பி.எட் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளை கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தொடங்கி வைத்தார். இந்த வரவேற்பு தடகள போட்டியில் மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியே தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.

மாணவர்களுக்கு 200 மீ, 3000 மீ ஓட்ட பந்தயம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல், மாணவிகளுக்கு 100 மீ, 1500 மீ ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. நிறைவு விழாவில் தென்காசி ஸ்ரீ பரமக்கல்யாணி கல்லூரி உடற்கல்வி இயக்குனரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான நடராஜன் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, வாழ்த்தி பேசினார். விழாவில், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பேராசிரியர்கள் தனலெட்சுமி, நெல்சன்துரை, சந்தானசேகர் சிவா, அருள் ரூபன் மற்றும் பிபி.எஸ் 3-ம் ஆண்டு, பி.பி.எட் மற்றும் எம்.பி.எட் 2-ம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.


Next Story