போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
திருச்செந்தூரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் போக்குவரத்து போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணி திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் தொடங்கி காமராஜர் சாலை, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, தெற்கு ரத வீதி, மேல் ரத வீதி வழியாக வ.உ.சி. திடலில் நிறைவடைந்தது. இப்பேரணியை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தொடங்கி வைத்தார். இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்துராஜ், கனகராஜ், சுப்பிரமணியன், போக்குவரத்து பிரிவு போலீசார் மற்றும் 50 ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோக்களுடன் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பேசினார்.
Related Tags :
Next Story