மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கடையநல்லூர் மின்வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். அவர் ஆதார் எண் இணைப்பை துரிதப்படுத்த வேண்டும் என்று அனைத்து பொறியாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மின்நுகர்வோர்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் பிரேமலதா மற்றும் உதவி செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story