மின் சிக்கன வார விழா
குன்னூரில் மின் சிக்கன வார விழா கடைப்பிடிக்கப்பட்டது.
குன்னூர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மின் சிக்கனத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) வில்வராஜ் மற்றும் குன்னூர் செயற் பொறியாளர் சேகர், ஆகியோர் அறிவுரைப்படி குன்னூர் கோட்டத்திலுள்ள அனைத்து உபகோட்ட பிரிவு அலுவலகங்களில் மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டது.
மேலும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிலையங்கள் மற்றும் கடை வீதிகளில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.இதுதவிர மாணவ, மாணவியரிடையே மின் சிக்கனத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட்டு, அதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.