16-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
சூளகிரி பகுதியில் 16-ந் தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் சூளகிரி நகர், மாதரசனப்பள்ளி, உலகம், ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், செம்பரசனப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரண்டப்பள்ளி, பேடப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, தியாகரசனப்பள்ளி, பங்காநத்தம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story