மின்சார சிக்கன வார விழா


மின்சார சிக்கன வார விழா
x

அம்பையில் மின்சார சிக்கன வார விழா நடந்தது

திருநெல்வேலி

அம்பை:

நெல்லை மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டம் சார்பில் அம்பையில் மின்சார சிக்கன வார விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்பை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பேரணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தலைமை தாங்கினார்.

நகர்மன்ற தலைவர் கே.கே.சி.பிரபாகரன், பேராசிரியர் சங்கர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மீனாட்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் ராமகிளி, அருள்ராஜ், மகேஷ் சாமிநாத், திருசங்கர், இளநிலை பொறியாளர்கள் விஜயராஜ், கைலாச மூர்த்தி, ஆக்னஸ் சாந்தி, பரிமளாதேவி, சுதாகல்யாணி, வனிதா, உதவி கணக்கு அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் மின்சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மின்பாதை ஆய்வாளர் கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இளநிலை பொறியாளர் சொர்ணலதா வரவேற்றார். இளநிலை பொறியாளர் ஸ்டீபன் நன்றி கூறினார்.


Next Story