மேலுமலை வனப்பகுதியில் 3 யானைகள் முகாம்


மேலுமலை வனப்பகுதியில் 3 யானைகள் முகாம்
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:48 PM GMT)

சூளகிரி அருகே மேலுமலை வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டுள்ளன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி, சிப்காட், டோல்கேட், சோக்காடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 காட்டு யானைகள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்தன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த 3 யானைகளும் சூளகிரி அருகே மேலுமலை வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். அந்த 3 யானைகளில் ஒன்று தனியாக பிரிந்து சூளகிரி அருகே சாமல் பள்ளம் பகுதியில் சுற்றித்திரிந்தது. நேற்று முன்தினம் கரகூரை சேர்ந்த சின்னசாமி (50) என்பவரை யானை தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் 3 யானைகளும் ஒன்றாக சேர்ந்து சுற்றித்திரிந்து வருகின்றன. இதனிடையே அந்த 3 யானைகளும் ேநற்று சாமனூர் வழியாக மேலுமலை வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளன. அங்கிருந்து அந்த 3 யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story