கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்


கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
x

விக்கிரமசிங்கபுரத்தில் கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் தனக்கு சொந்தமான வயலில் ஒரு ஏக்கரில் கரும்பு பயிரிட்டு உள்ளார். நேற்று அதிகாலை அந்த தோட்டத்தில் புகுந்த 6 யானைகள், கரும்பை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது. தகவல் அறிந்த வருவாய் துறையினர் அங்கு வந்து சேதமடைந்த கரும்பு பயிரை பார்வையிட்டனர்.

இதுகுறித்து விவசாயி முருகன் கூறுகையில், 'நாங்கள் கரும்பு பயிரை நன்றாக பராமரித்து பாதுகாத்து வந்தோம். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் யானைகள் அவற்றை சேதப்படுத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. சேதம் அடைந்த கரும்புகளின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும். அதற்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும்' என்று தெரிவித்தார். யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்கும் வகையில் மலை அடிவாரத்தில் விடுபட்ட இடங்களில் சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story