கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜவேலு தலைமை தாங்கினார். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்ட அலுவலர் பரமசிவம் முன்னிலை வகித்தார். இதில் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஹெலன், தமிழ்வேல் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனத்தினர் கலந்து கொண்டு மாணவர்களிடம் நேர்க்காணல் நடத்தினர். இதில் வேலைக்காக 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story