ஈரோடு: கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - போலீஸ் விசாரணை


ஈரோடு:  கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - போலீஸ் விசாரணை
x

ஆசனூர் அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

ஈரோடு


ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் உறவினர் ஒருவரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கர்நாடக மாநிலம் மைசூருக்கு இன்று காலை காரில் சென்றுள்ளார்.

அப்போது ஆசனூர் அருகே செம்மண் திட்டு என்ற இடத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.இந்த விபத்தில் காரினுள் இருந்த அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story