போலி இயற்கை உரம் விற்பனையை தடுக்க விவசாயிகள் கோரிக்கை


போலி இயற்கை உரம் விற்பனையை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
x

கோவில்பட்டி பகுதியில் போலி இயற்கை உரம் விற்பனையை தடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு, கரிசல்பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டாசி ராபி பருவத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சில கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு உரம் வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் தஞ்சாவூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து சில வியாபாரிகள் முகாமிட்டு, அந்த உரத்திற்கு இணையாக இருப்பதாக கூறி, இயற்கை கடல் பாசி உரத்தை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த இயற்கை உரம் அரசு ஆய்வுக்கு உட்படுத்தி உரிய சான்று வேளாண்மை துறையால் வழங்கப்பட்டு அதன் பின்னரே விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை அரசு விவசாயிகளுக்கு விளக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் கூறப்படவில்லை. எனவே, அதிகாரிகளுக்கு தெரிந்து போலி இயற்கை உரம் விற்பனை செய்யப்படுவதாக, விவசாயிகள் சந்தேகிக்கின்றனர். எனவே இப்பகுதியில் விற்பனை செய்யப்படும் இயற்கை உரம் குறித்து அரசும், அதிகாரிகளும் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல், போலி இயற்கை உரம் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.


Next Story