பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் ஆதார் எண்ணை விவசாயிகள் இணைக்க வேண்டும்
பிரதம மந்திரியின் நிதி உதவி திட்டத்தில் ஆதார் எண்ணை விவசாயிகள் இணைக்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
பிரதம மந்திரியின் நிதி உதவி திட்டத்தில் ஆதார் எண்ணை விவசாயிகள் இணைக்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிசான் திட்டம்
விவசாயிகள் இடுபொருட்கள் வாங்குவதற்காக 2019-ம் ஆண்டு முதல் பிரதம மந்திரியின் நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், அனைத்து விவசாயிகளுக்கும் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் இதுவரை 12 தவணைகள் பணம் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நடப்பு 13-வது தவணை தொகை பெறுவதற்கு அரசு சில வழிமுறைகள் தெரிவித்துள்ளது.
வலைதளத்தில் பதிவேற்றம்
அதன்படி விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்கு மற்றும் பிரதம மந்திரியின் நிதி உதவி திட்டத்தில் இணைக்க வேண்டும். மேலும், அத்துடன் விளையாட்டுகள் தங்களது நில உரிமை பட்டா விவரங்களை பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த நடைமுறையை கடைப்பிடித்து விவசாயிகள் அனைவரும் பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.