விவசாயிகள் சங்க கூட்டம்


விவசாயிகள் சங்க கூட்டம்
x

திருக்காட்டுப்பள்ளியில் விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

பூதலூர் ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கணபதி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க நிர்வாகி துரைராஜ் முன்னிலை வகித்தார். பூதலூர் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஏப்ரல் 15-ந் தேதி பூதலூர் ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்க மாநாட்டை நடத்துவது, பூதலூர் ஒன்றியத்தில் தோகூரில் இருந்து சர்க்கார் பாளையம் வழியாக செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூர சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் கோவிலடி தலைப்பு வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story