விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:46 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா, விஜயமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அம்மையப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். காட்டுப்பன்றி இனத்தை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். வனத்துறை அலுவலகத்தில் துணை வன உயிரின பாதுகாவலர் தலைமையில் மாதம் தோறும் விவசாயிகள் கூட்டம் நடத்த வேண்டும்.

இழப்பீடு

செண்பகத்தோப்பு காட்டழகர் கோவில், பேச்சியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பட்டா நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வனவிலங்குகள் தாக்கி உயிர் இழக்கும் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விவசாய சங்க நிர்வாகிகள் பெருமாள், காளிதாஸ், ஜாகிர் உசேன், பீமராஜா, ஹரி கிருஷ்ணன் அப்பாஸ், சுரேஷ் கண்ணன், மூர்த்தி, வழக்கறிஞர் ரமேஷ், ராமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story