விவசாயிகள் சங்க கூட்டம்


விவசாயிகள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:45 PM GMT)

விவசாயிகள் சங்க கூட்டம்

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய குழு மற்றும் கடம்பாகுளம் விவசாயிகள் இணைந்து தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனையில் கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகள் சங்க தலைவர் பூலான் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கடம்பாகுளம் பாசனத்தில் தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் அறுவடையானதும் காலம் தாழ்த்தாமல் முன்சாகுபடி செய்ய அனுமதி கேட்பது, மறுக்கும் பட்சத்தில் மேல்முறையீடு செய்வதற்கும், எதிர் வரும் மார்ச் மாதத்திற்குள் கடம்பாகுளம் நீர் மட்டத்தை அறிந்து முன் சாகுபடி செய்ய கடம்பாகுளம் விவசாயிகளை கேட்டுக்கொள்வது, நெல் கொள்முதல் நிலையம் கூடுதலாகவும், காலம் தாழ்த்தாமலும் அறுவடை காலத்தில் விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகத்தினை கேட்டு கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ரவிச்சந்திரன், நயினார் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story