26-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம்


26-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 10:30 AM GMT)

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி 26-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம்; சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

நாகப்பட்டினம்


தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்ட நிர்வாகிகள் போராட்ட ஆயத்த மாநாடு நாகையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் சித்ரா, பாலசுப்ரமணியன், செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். நாகை மாவட்ட துணைத்தலைவர் அருளேந்திரன் வரவேற்றார். மாநில செயலாளர் லதா தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர்கள் ராஜூ, கரிகாலன், ராமதேவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு முதல்- அமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைக்க வேண்டும். சத்துணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை உண்ணாவிரத போராட்டம் மாவட்ட தலை நகரங்களில் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில தலைவர் கலா கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், பொருளாளர் அந்துவன்சேரல், வட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story